Saturday 16 March 2013

சத்தியில் நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-துவக்க விழா-




    
   மரியாதைக்குரிய நண்பர்களே,
                               வணக்கம். 15-03-2013 இன்று
     உலக முக்கிய தினங்களில் ஒன்றான ''உலக நுகர்வோர் தினவிழா'' ஆகும்.இன்றைய தினத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் சமூக நலனுக்கான பொதுச் சேவை அமைப்பு  இனிய உதயமாகி உள்ளது.அது பற்றிய விவரம் காண்க.






 
                சத்தியில் முப்பெரும் விழா.
     சத்தியமங்கலத்தில்15-03-2013 அன்று உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தேசிய தினவிழா மற்றும் சமூக சேவைக்கான புதிய அமைப்பு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
     சத்தியமங்கலம் லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் ‘’நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு’’ என்ற பெயரில் புதிய சமூக சேவை அமைப்பு உருவாக்கப்பட்டது.

    விழாவிற்கு 
            திரு.A.A. இராமசாமி அவர்கள் தலைமை வகித்தார்.       
           திரு,K. லோகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
           திரு. V.ராஜன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். 
           திரு. C. பரமேஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 
           திரு.V. பாலமுருகன்-தாளவாடி அவர்கள் நன்றி கூறினார்.

   நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு என்ற புதிய சமூக சேவை அமைப்பிற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
     இந்த இயக்கம் ‘வாழு வாழ விடு’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி பொதுநலனுக்காக செயல்படும்.
 மேலும்,பொது மக்களுக்கு
      (1) நுகர்வோர் கல்வி கொடுப்பதற்காக, சட்ட விழிப்புணர்வு கொடுப்பது, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு , பயிலரங்கம் நடத்துவது.
      (2) சாலைப்பாதுகாப்புக் கல்வி கொடுப்பதற்காக,ஓட்டுநர் தினவிழா,பயணிகள் தினவிழா,பாதசாரிகள் தினவிழா,நடத்துவது.முதலுதவிப் பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை& சிகிச்சை முகாம்.மற்றும் மன அழுத்தம் போக்க யோகா வகுப்புகள் ஆகியன இலவசமாக நடத்துவது.
    (3)இளைய சமுதாய நலனுக்காக கலாச்சாரச் சீர்கேடு,மது போதையின் தீமைகள்,மற்றும் நமது பண்பாடும் குடும்ப உறவும் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துவது.
    (4) மலைப்பகுதி மக்களுக்காக சமூக முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,உயர் கல்விக்கான விழிப்புணர்வு கொடுப்பது..
  (5) மக்கள் நலனுக்காக நடத்தப்படும் அரசுத்துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளிலும்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் இணைந்து செயல்படுவது.
        போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  விழா ஏற்பாட்டினை திரு. S.ரவி கடம்பூர் மலை, மற்றும் தனபால் – தனம் மொபைல் ஆட்டோ சத்தி ஆகியோர் செய்து இருந்தனர்.
          நிர்வாகிகள் பட்டியல் விவரம் காண்க.

            ++++++++++++++++++++++++++++
  நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம்.-
                     தமிழ்நாடு.

   
     DATE;- 15-03-2013 FRI DAY. 05-00P.M.

       
         நிர்வாகிகள் பட்டியல் விவரம்;-

தலைவர்- திரு.A.A. இராமசாமி அவர்கள்,

             ஸ்ரீகணபதி அரிசி மண்டி -சத்தியமங்கலம்.

துணைத் தலைவர்- திரு.S. ரவி அவர்கள்,

                    கடம்பூர் மலை.

செயலாளர் – திரு. C.பரமேஸ்வரன் அவர்கள் -சத்தியமங்கலம்.

துணைச் செயலாளர் – திரு.V. ராஜன் அவர்கள் -காசிபாளையம்.(கோபி)

பொருளாளர் – திரு. V.பாலமுருகன் அவர்கள்,

                 முத்திரைத்தாள் விற்பனையாளர் -தாளவாடி.

ஒருங்கிணைப்பாளர் – திரு.K. லோகநாதன் அவர்கள்,

                    லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி,

                     209 தேசிய நெடுஞ்சாலை- சத்தியமங்கலம்.

தகவல் தொடர்பு ஆலோசகர் – திரு. வேலுச்சாமி அவர்கள்,

                          செய்தியாளர்- சத்தியமங்கலம்.

செயற்குழு உறுப்பினர்கள்.

திரு. தனபால் அவர்கள்,

        தனம் மொபைல் ஆட்டோ.- சத்தியமங்கலம்.

திரு. A.P.ராஜூ அவர்கள், தாளவாடி

திரு.A.D. பிரபு காந்த் அவர்கள்,

     ஸ்ரீவாசவி தங்க மாளிகை- சத்தியமங்கலம்.

திரு. K.A.B.சதீஷ்குமார் அவர்கள்,

     கிருஷ்ணா கல்யாண் ஸ்டோர்ஸ்-,சத்தியமங்கலம்.

திரு.மனோஜ் பாண்டியன் அவர்கள்,

            செய்தியாளர் -சத்தியமங்கலம்.

திரு. சிவக்குமார் அவர்கள்,

      செய்தியாளர் -சத்தியமங்கலம்.

திரு. S.பரமேஸ்வரன் அவர்கள்,

       எல்.ஐ.சி.முகவர்,- கோபி செட்டிபாளையம்.
                       பதிவேற்றம்;- 
          திரு. C.பரமேஸ்வரன் அவர்கள், செயலாளர்- 
       நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-
                       தமிழ்நாடு.

Thursday 31 May 2012

கோபி முதல் சென்னை வரை

அன்பு நண்பர்களே,வணக்கம். 
            இந்த பதிவில் ''கோபி முதல் சென்னை வரை'' என தலைப்பிட்டு எனக்கு கிடைத்த மற்றும் சேகரித்த தகவல்களை ,அனுபவங்களை பதிவிடுகிறேன்.இது கண்டிப்பாக புதியவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.ஆர்வமுள்ளவர்கள் ரசிக்கவும்.வெறுப்பவர்கள் மன்னிக்கவும்.



         
      கடந்த 25-05-2012 அன்று இரவு சத்தியில் COTI TRAVELSஇல் ரிசர்வ் செய்து இரவு 10-30மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று  அங்கு விழிபிதுங்க சுற்றி அலைந்து ஒருவழியாக 26-05-2012 அன்று சென்னையில் இரவு 09-15 மணி புறப்படும் SETC அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸில் ரிசர்வ் செய்து இடம் பிடித்து ஈரோடு வந்து சேர்ந்தேன்.அந்த அவஸ்தை உங்களுக்கு இருக்கக்கூடாதுன்னுதான்! இந்த பதிவு.



   
        
        இது சென்னை கோயம்பேடு  புறநகர் பேருந்து நிலையம்.இதுதாங்க மிகப்பெரிய பேருந்து நிலையம்ங்க.இதைத்தாங்க C.M.B.T. அப்படீங்கறாங்க!அதாவது சென்னை மொஃFசல் பஸ் டெர்மினஸ் ( CHENNAI MOFUSSIL TERMINUS ) இப்ப புரியுதுங்களா!






இது C.M.B.T.யின் உட்புறத்தோற்றம்.என்ன சுத்தமாக உள்ளது பாருங்க!








ரயில் வழித்தடங்கள் பற்றி பின்னர் பதிவிடுகிறேன்.அதுவரை பொறுத்திருங்கள்.நான் சுற்றிய அனுபவமே போதுமானது.இருப்பினும் எனது கண் ஆபரேசன் காரணத்தால் தாமதமாக பதிவிடுகிறேன்.




இது மோனோ ரயில் திட்ட வரைபடம்.






இது பஸ் ரூட் வரைபடம்.



































      இது சேப்பாக்கம் ஸ்டேடியம்ங்க. இது 27-05-2012 ந் தேதி நடக்கும் ஐபிஎல்2012 போட்டிக்காக தயாராகிக்கொண்டிருந்ததுங்க.(கிளிக்-26-05-2012 மாலை 6-00 மணி)

Wednesday 16 May 2012

TAMIL NEWS PAPERS

. அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை திட்டம்-





அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை திட்டம்-
   டெல்லி: முக்கிய அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான, தேசியளவிலான கல்வி மற்றும் உதவித்தொகை தேர்வு(NEST - Nationwide education & scholarship test) பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதன்மூலம், ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான உதவித்தொகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு, 2 மணி நேரங்களுக்கு நடக்கும் ஆன்லைன் தேர்வு மூலமாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், ஆங்கிலம், பொதுஅறிவு மற்றும் எளிமையான லாஜிக் போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
CBSE, ICSE மற்றும் மாநில வாரியங்களின் பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். Sample paper -களை www.nest.net.in/sample-questions.htm. என்ற இணையதளத்தில் பார்க்கலாம். கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் படித்த மாணவர்கள் மட்டுமே இதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.
அபராதமின்றி விண்ணப்பிக்கும் கடைசி தேதி 15 மே, 2012. அபராதத் தொகை ரூ.100 செலுத்தினால் ஜுன் 15 அன்று விண்ணப்பிக்கலாம். அபராதம் ரூ.200 செலுத்தினால் ஜுலை 15ம் தேதி விண்ணப்பிக்கலாம். ஜுலை 29ம் தேதி, தேர்வு நடைபெறும் நாள்.

ஐ.ஐ.டி.ஜே.இ.இ., எழுதுகிறீர்களா?

அன்பு நண்பர்களே,வணக்கம்.
      இங்கு உயர்கல்விக்கு முதலிடம் கொடுக்கும்வகையில் கிராம்பபகுதியை சேர்ந்த மாணவ,மாணவிகளுக்காக என்ன படிக்கலாம்?எங்கு படிக்கலாம்? ஏன் படிக்கலாம்? என்ற சிந்தனையோடு தெளிவான முடிவு எடுத்து படித்து வாழ்க்கையில் முன்னேற முதலில் அவர்களது தடுமாற்றத்தைப்போக்க,தன்னம்பிக்கை வளர உயர்கல்விக்கான தகவல்கள் சேகரித்து பதிவிட முயற்சிக்கிறோம். இதற்கான ஆலோசனை வழங்கிய திரு.பொன்னுசுவாமி (சென்னை) அவர்களுக்கு நன்றி! உதவிட விருப்பம் உள்ள தாராள மனம்உள்ள பெரியோர்களின் ஆலோசனைகளும் சமூகநலனுக்காக ஏற்றுக்கொள்கிறோம்.


 
ஐ.ஐ.டி.ஜே.இ.இ., எழுதுகிறீர்களா?-13-12-2010

உலகம் தழுவிய அளவில் போற்றப்படும் அகில இந்தியத் தொழில் நுட்பக்கழகங்கள் (ஐ.ஐ.டி.,) மாணவர் சேர்க்கைக்கு, நாடு தழுவிய அளவில் ஆண்டு தோறும் இணைந்த நுழைவுத்தேர்வு நடத்துகின்றன.
பழைய ஐ.ஐ.டி., 7, புதியவை 8 ஆகியவற்றோடு, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்பக்கல்லூரிக்கும் (IT - BHU), தன்பாத் இந்தியச் சுரங்கவியல் கல்லூரிக்கும் (Indian School of Miner, Dhambad) சேர்த்து இத்தேர்வு பொருந்தும் என்பதால்தான் "Joint' என்ற அடைமொழி.

ஐ.ஐ.டி., உள்ள இடங்கள்
பழைய ஐ.ஐ.டி.,கள் மும்பாய் (நிறுவல்: 1958), டில்லி (1961), கவுகாத்தி (1995), கான்பூர் (1960), காக்பூர் (1950), சென்னை (1959), ரூர்க்கி (2001) ஆகிய நகரங்களிலும், புதியவை புவனேஸ்வர், காந்திநகர் ஐதராபாத், இந்தோர், மாண்டி, பாட்னா, ரோப்பார், ஜோத்பூர் நகரங்களிலும் உள்ளன.

படிப்புவகைகள்
இவற்றில் மொத்தம் 36 இளநிலைப் பொழியியல் பட்டப்படிப்புகள் பி.டெக்., 9 எம்.எஸ்சி., / எம்.டெக் (5 ஆண்டு  இன்டக்ரேட்டட்) படிப்புகளும் 65 எம்.டெக்., படிப்புகளும், பி.டெக்., + எம்.டெக்., அல்லது பி.எஸ் + எம்.எஸ்., பட்டங்கள் தரும் இருபட்ட படிப்புகளும் வழங்கப்படுகின்றன. தவிர, பி.பார்ம்., (4 ஆண்டு), B Des (4 ஆண்டு), B Arch (5 ஆண்டு), எம்.பார்ம்., (5 ஆண்டு  Dual), எம்.எஸ்சி., (2 ஆண்டு) படிப்புகளும் உண்டு. சில கல்லூரிகள் முற்றிலும் புதிய படிப்புகளை வடிவமைத்தும் நடத்துகின்றன. சென்னை ஐ.ஐ.டி., (ஐ.ஐ.டி., எம்) 2007 முதல் வழங்கும் 5 ஆண்டு படிப்பான எம்.ஏ., (Development Studies / Economics / English Studies) இந்த வகையில் அடங்கும்.

சென்னை ஐ.ஐ.டி., யில் பி.டெக்., பிரிவுகள்
ஏரோஸ்பேஸ் இன்ஜி., பயோடெக்  ., கெமிக்கல் இன்ஜி., சிவில் , கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜி., எலக்ட்ரிக்கல் இன்ஜி(பவர் ), இயற்பியல் இன்ஜி., மெட்டலர்ஜிக்கல் மற்றும் மெட்டீரியல் இன்ஜி.மெக்கானிக்கல் இன்ஜி., நேவல் ஆர்க்., மற்றும் ஓசன் இன்ஜி ஆகிய பி.டெக்., பரிவுகள் சென்னை ஐ.ஐ.டி., யில் உண்டு. இவற்றில் சிலவற்றில் வேறு பல பிரிவுகளிலும்  பி.டெக்., + எம்.டெக்.,  ( 5 ஆண்டு டியூவல்) படிப்பும் உண்டு.

தேர்வு நாள்
ஐ.ஐ.டிஜே.இ.இ., நுழைவுத்தேர்வு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் இரண்டாம் ஞாயிறு நடத்தப்படும். அதன்படி அடுத்த தேர்வு நாள் ஏப்ரல் 10, 2011. கடந்த ஆண்டு சென்னை ஐ.ஐ.டி., தேர்வை நடத்தியது. இந்த முறை கான்பூர் ஐ.ஐ.டி., நடத்தும்

தேர்வுக்கு விண்ணப்பித்தல்
இப்பொழுது மொத்தம்  15 ஐ.ஐ.டிகள் இருந்தாலும், இவற்றில் 7 பழைய ஐ.ஐ.டி.,களைச் சார்ந்தே நாட்டை, தேர்வுநடத்துவதற்காக 7 பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அந்தந்தப் பிரிவில் இருப்பவர்கள் அப்பிரிவு ஐ.ஐ.டி., க்கே விண்ணப்பிக்க வேண்டும். சென்னைப்பிரிவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழகம் அடங்கும். இவற்றைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: சேர்மேன், ஜே.இ.இ., ஐ.ஐ.டி., மெட்ராஸ், சென்னை 600036 (தொலைபேசி எண்:04422578220, பேக்ஸ்: 04422578224) இணையதளம்: http://jee.iitm.ac.in  ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பகாலமும் கட்டணமும்
ஆன்லைன் மற்றும் நேரில் ஆகிய இருமுறைகளிலும் விண்ணப்பிக்க கடைசி நாட்கள் முறையே டிசம்பர் 15, 2010. தமிழகத்தில் பின்வரும் இந்தியன் வங்கிக்கிளைகளில் விண்ணப்பங்களைப் பெறலாம். சென்னை அடையாறு, அண்ணாநகர், ராயபுரம், திநகர்; கோவைஆர்.எஸ்.புரம், மதுரை, சேலம், வேலூர், கன்னியாகுமரி, திருச்சிகண்டோன்மென்ட் கட்டணம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.500 மற்றவர்களுக்கு ரூ.1000.

சில குறிப்புகள்
ஒளி உணர்வால் தகவல் அறிவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட(ஓ.எம்.ஆர்.,) தாளில் சரியான தகவலுக்கு ஏற்ற குமிழுக்குள் பென்சிலால் தீட்டிக்காட்ட வேண்டும். ஒரே பகுதியில் இரண்டு தேர்வுமையங்களை குறிப்பிட்டுக்கேட்கலாம். வினாத்தாளை ஆங்கிலம் அல்லது இந்தியில் பெற வழியுண்டு. ஆனால் அதை விண்ணப்பத்திலேயே தெரிவித்துவிட வேண்டும். இதேபோல் பார்வைக்குறை உள்ளவர்கள் சற்றுப் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்ட வினாத்தாளைப் பெறவும் வழியுண்டு.

தகுதிகள்
நுழைவுத்தேர்வு எழுதத்தேவையான தகுதிகளில் ஒன்று: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுதிறனாளிகளுக்கு அக்டோபர் 1, 1981 க்குப் பிறகும், மற்றவர்கள் அக்டோபர் 1, 1986 க்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும் மற்றும் அக்டோபர் 1, 2009க்குப் பிறகே தகுதித்தேர்வில் தேறியிருக்க வேண்டும். தகுதிப்படிப்புகளில் சில: பிளஸ்2, மூன்றாண்டு பொறியியல் பட்டயப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண்கள் கீழ்வரம்பு: மொத்தத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 55 சதவீதமும் மற்றவர்களுக்கு 60 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

இடஒதுக்கீடு
எல்லா மையரசு நிறுவனங்களுக்கும் உள்ள வகுப்புவாரி இடஒதுக்கீடு இதற்கும் பொருந்தும் ஆதிதிராவிடர்15%, பழங்குடியினர்7.5%, பிற்படுத்தப்பட்டவர்கள் வருவாய் அடிப்படையில் கீழ் மட்டத்தை சேர்நதவர்களுக்கு மட்டும்27%, மாற்று திறனாளிகளுக்கு எல்லா பிரிவிலும் 3 சதவீதம் உள்ஒதுக்கீடாக ஒதுக்கப்படும். மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும், போர்/அமைதிகால நடவடிக்கைகளால் நிரந்தரமாக உறுப்பிழந்தவர்கள்/ உயிர்நீத்தவர்கள் ஆகியோரின் வாரிசுகளுக்கு 2% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள்கள்
நுழைவுத்தேர்வு இரண்டு தாள் களைக்கொண்டது. தேர்வு நாளின் முற்பகல் 9 முதல் 12 மணிவரை முதல் தாளும்பிற்பகல் 2 முதல் 5 மணி வரை இரண்டாம் தாளும் நடைபெறும். எவரும் இரண்டுதாளையும் ஒரே தேர்வறையில் ஒரே இருக்கையில்தான் எழுதுவர். இருதாள்களிலும் வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய 3 பகுதிகள் உண்டு. இரண்டு தாளிலும் எல்லாப் பக்கங்களின் அடிப்பகுதியிலும் தோராயக் குறிப்புகளுக்கு காலியிடம் விடப்பட்டிருக்கும். தாளின் இறுதியில் சில முழுப்பக்கங்களும் விடப்பட்டிருக்கும். பத்து வகையில் வினா வரிசை மாறிய வினாப்புத்தகங்கள் பயன்படுத்தப்படுவதால் அடுத்தவரைப் பார்த்தெழுதும் வாய்ப்பே இல்லை.
வினாக்கள் அப்ஜெக்டிவ் வகையில் ஆனவை. விடைத்தாள்கள் கணினி உதவியுடன் திருத்தப்படும் ORS தாள்கள். ஆகவே திருத்தும் தவறுகளுக்கு இடமே இல்லை.

மதிப்பெண்கள்
ஒவ்வொரு தாளின் மூன்று பகுதிகள் ஒவ்வொன்றிலும் 4 உட்பகுதிகள் இருக்கும். 2010ஆம் ஆண்டு தேர்வில் முதல்தாளில் உட்பகுதி 1,3,4ன் வினாக்களுக்கு சரியான விடைக்கு 3 மதிப்பெண்கள். 2வது உட்பகுதி வினாக்களுக்கு விடை எந்த அளவுக்குச் சரியோ அதற்கு ஏற்ப 3 அல்லது அதற்குக் கீழ் மதிப்பெண் அளிக்கப்படும். உட்பகுதிகள் 1,3ல் தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். இரண்டாம் தாளின் மூன்று பகுதிகள் ஒவ்வொன்றிலும் 4 உட்பிரிவுகள் உண்டு. இவற்றில் சரியான விடைக்கு முறையே 5,3,3,8 மதிப்பெண்கள். உட்பகுதி 4க்கு மட்டுமே விடை முழுக்கச் சரியாக இல்லாவிட்டாலும், எந்த அளவுக்குச் சரியோ அதற்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். உட்பகுதி 1,3ல் மட்டும் தவறான விடைக்கு முறையே 2,1 மதிப்பெண் குறைக்கப்படும். இத்தனையும் நிலையான மதிப்பெண் பங்கீடு அல்ல; ஆண்டுக்கு ஆண்டு இது மாறலாம்.

வினாவகை
கடந்த தேர்வில் முதல் தாளில் வேதியியல், கணிதம், இயற்பியல் பகுதிகள் ஒவ்வொன்றிலும் முதல் உட்பகுதி வினாக்கள் 8. ஒவ்வொன்றுக்கும் 4 விடைகள்; ஒரே விடைதான் சரி. இரண்டாம் உட்பகுதி வினாக்கள் 5. ஒவ்வொன்றுக்கும் 4 விடைகள்; ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியாக இருக்கலாம். எல்லாச் சரியான விடையையும் தந்தால்தான் முழு மதிப்பெண். மூன்றாம் உட்பகுதியில் இரண்டு பத்திகள் (Paragraphs). ஒவ்வொரு பத்தியின் அடிப்படையிலும் 3 அல்லது 2 வினாக்கள் தரப்படும். 4 விடைகளில் ஒன்றுதான் சரி. நான்காம் பகுதி வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 0 முதல் 9 வரை ஏதாவது ஒரு முழுவெண்தான். ஆக 10 விடைகள் தரப்பட்டிருக்கும்; சரியான எண்ணுக்குத் தீட்டிக் காட்ட வேண்டும். இவ்வகையில் 10 வினாக்கள்.

இரண்டாம் தாளின் ஒவ்வொரு பகுதியிலும் முதல் உட்பிரிவில் ஒரே சரியான விடைகொண்ட 6 வினாக்கள். இரண்டாம் உட்பிரிவில் 0 முதல் 9 வரையான முழுவெண் விடைகொண்ட 5 வினாக்கள்; மூன்றாம் உட்பிரிவில் 2 பத்திகளில் மொத்தம் 6 வினாக்கள்; நான்காம் பகுதியில் இணை சேர்க்கும் (Matching) வினாக்கள் 2*4=8. இணை ஒன்றுக்கு  ஒன்று என்று மட்டுமில்லாமல், ஒன்றுக்கு  பலவும் இருக்கலாம்.

பாடத்திட்டமும் பகுதி முக்கியத்தவமும் தேர்வுக்கு முறையான பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு மாற்றம் ஏதும் இல்லை. பாடத்திட்டத்தின் பகுதிகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம் ஆண்டுக்கு ஆண்டு மாறலாம். ஆனாலும் அண்மைக் காலத்தில் இருந்ததைக் கொண்டு பின்வருமாறு கொள்ளலாம்.

வேதியியல்: Inorganic chemistry  Qualitative Analysis, Coordination com-pounds; Physical chemistry  Chemical Equilibrium; Organic Chemistry   முழுமையும்.

இயற்பியல்: Mechanics, Fluids, Heat & Thermo dynamics, Waves, Sound, Capacitors & Electrostatics, Magnatism, EMI, Optics, Modern Physics.

கணிதம்: 2010ஆம் ஆண்டு வினாத்தாளில், பாடத்திட்டத்தின் பகுதிகளிலிருந்து தரப்பட்டிருந்த வினாக்களில் எண்ணிக்கை பின்வருமாறு:

Analytical Geometry  12; Functions, Derivatives, Maxima /Minima  8; Matrices/Determinants, Definitive Integrals   ஒவ்வொன்றிலும் 5; Vectors, Trigonometry, series   ஒவ்வொன்றிலும் 5; Probability, Quadratic Equations ஒவ்வொன்றிலும் 1.

இது போட்டித் தேர்வு என்பதாலும், இந்த முக்கியத்துவங்கள் ஆண்டுக்கு ஆண்டு மாறலாம் என்பதாலும், பாடத்திட்டத்தின் எந்தப் பகுதியையும் விலக்காமல் முழுமையாகப் படிப்பது தான் நல்லது.

பேரா. ப.வே.நவநீதகிருஷ்ணன் (நன்றி;- முதல் தலைமுறை)